Wednesday, November 14, 2007

6th thirumurai

திருச்சிற்றம்பலம்
திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்ததேவாரப் பதிகங்கள்
ஆறாம் திருமுறை

1.பாரானைப் பாரினது பயனா னானைப் படைப்பாகிப்
பல்லுயிர்க்கும் பரிவோன் றன்னை
ஆராத இன்னமுதை அடியார் தங்கட்
கனைத்துலகு மானானை அமரர் கோனைக் காராருங்
கண்டனைக் கயிலை வேந்தைக்
கருதுவார் மனத்தானைக் காலற் செற்ற
சீரானைச் செல்வனைத் திருமாற் பேற்றெஞ்
செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

2.விளைக்கின்ற நீராகி வித்து மாகி விண்ணோடு மண்ணாகி விளங்கு செம்பொன்
துளைக்கின்ற துளையாகிச் சோதி யாகித் தூண்டரிய சுடராகித் துளக்கில் வான்மேல்
முளைக்கின்ற கதிர்மதியு மரவு மொன்றி முழங்கொலிநீர்க் கங்கையொடு மூவா தென்றுந்
திளைக்கின்ற சடையானைத் திருமாற் பேற்றெஞ் செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.


3.மலைமகள்தங் கோனவனை மாநீர் முத்தை மரகதத்தை மாமணியை மல்கு செல்வக்
கலைநிலவு கையானைக் கம்பன் றன்னைக் காண்பினிய செழுஞ்சுடரைக் கனகக் குன்றை
விலைபெரிய வெண்ணீற்று மேனி யானை மெய்யடியார் வேண்டுவதே வேண்டு வானைச்
சிலைநிலவு கரத்தானைத் திருமாற் பேற்றெஞ் செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே

4.உற்றானை உடல்தனக்கோர் உயிரா னானை ஓங்காரத் தொருவனையங் குமையோர் பாகம்
பெற்றானைப் பிஞ்ஞகனைப் பிறவா தானைப் பெரியனவும் அரியனவு மெல்லாம் முன்னே
கற்றானைக் கற்பனவுந் தானே யாய கச்சியே கம்பனைக் காலன் வீழச் செற்றானைத் திகழொளியைத் திருமாற் பேற்றெஞ் செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

5.நீறாகி நீறுமிழும் நெருப்பு மாகி நினைவாகி நினைவினிய மலையான் மங்கை
கூறாகிக் கூற்றாகிக் கோளு மாகிக் குணமாகிக் குறையாத உவகைக் கண்ணீர்
ஆறாத ஆனந்தத் தடியார் செய்த அனாசாரம் பொறுத்தருளி அவர்மே லென்றுஞ்
சீறாத பெருமானைத் திருமாற் பேற்றெஞ் செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

6.மருவினிய மறைப்பொருளை மறைக்காட் டானை மறப்பிலியை மதியேந்து சடையான் றன்னை
உருநிலவு மொண்சுடரை உம்ப ரானை உரைப்பினிய தவத்தானை உலகின் வித்தைக்
கருநிலவு கண்டனைக் காளத் தியைக் கருதுவார் மனத்தானைக் கல்வி தன்னைச்
செருநிலவு படையானைத் திருமாற் பேற்றெஞ் செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

7.பிறப்பானைப் பிறவாத பெருமை யானைப் பெரியானை அரியானைப் பெண்ணா ணாய
நிறத்தானை நின்மலனை நினையா தாரை நினையானை நினைவோரை நினைவோன் றன்னை
அறத்தானை அறவோனை ஐயன் றன்னை அண்ணல்தனை நண்ணரிய அமர ரேத்துந்
திறத்தானைத் திகழொளியைத் திருமாற் பேற்றெஞ் செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

8.வானகத்தில் வளர்முகிலை மதியந் தன்னை வணங்குவார் மனத்தானை வடிவார் பொன்னை
ஊனகத்தில் உறுதுணையை உலவா தானை ஒற்றியூர் உத்தமனை ஊழிக் கன்றைக்
கானகத்துக் கருங்களிற்றைக் காளத் தியைக் கருதுவார் கருத்தானைக் கருவை மூலத்
தேனகத்தி லின்சுவையைத் திருமாற் பேற்றெஞ் செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே

9.முற்றாத முழுமுதலை முளையை மொட்டை முழுமலரின் மூர்த்தியை முனியா தென்றும்
பற்றாகிப் பல்லுயிர்க்கும் பரிவோன் றன்னைப் பராபரனைப் பரஞ்சுடரைப் பரிவோர் நெஞ்சில்
உற்றானை உயர்கருப்புச் சிலையோன் நீறாய் ஒள்ளழல்வாய் வேவவுறு நோக்கத் தானைச்
செற்றானைத் திரிபுரங்கள் திருமாற் பேற்றெஞ் செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

10.விரித்தானை நான்மறையோ டங்க மாறும் வெற்பெடுத்த இராவணனை விரலா லூன்றி
நெரித்தானை நின்மலனை அம்மான் றன்னை நிலாநிலவு செஞ்சடைமேல் நிறைநீர்க் கங்கை
தரித்தானைச் சங்கரனைச் சம்பு தன்னைத் தரியலர்கள் புரமூன்றுந் தழல்வாய் வேவச்
சிரித்தானைத் திகழொளியைத் திருமாற் பேற்றெஞ் செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

5th thriumurai

திருமாற்பேறு
திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்ததேவாரப்பதிபங்கள்
நான்காம் திருமுறை
மாணிக் குயிர்பெறக் கூற்றை யுதைத்தன மாவலிபால் காணிக் கிரந்தவன் காண்டற் கரியன கண்டதொண்டர் பேணிக் கிடந்து பரவப் படுவன பேர்த்தும·தே மாணிக்க மாவன மாற்பே றுடையான் மலரடியே. கருடத் தனிப்பாகன் காண்டற் கரியன காதல்செய்யிற் குருடர்க்கு முன்னே குடிகொண் டிருப்பன கோலமல்கு செருடக் கடிமலர்ச் செல்விதன் செங்கம லக்கரத்தால் வருடச் சிவப்பன மாற்பே றுடையான் மலரடியே.

4th thirumurai

திருமாற்பேறு
திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்ததேவாரப்பதிபங்கள்
நான்காம் திருமுறை

மாணிக் குயிர்பெறக் கூற்றை யுதைத்தன மாவலிபால்
காணிக் கிரந்தவன் காண்டற் கரியன கண்டதொண்டர்
பேணிக் கிடந்து பரவப் படுவன பேர்த்தும·தே
மாணிக்க மாவன மாற்பே றுடையான் மலரடியே.

கருடத் தனிப்பாகன் காண்டற் கரியன காதல்செய்யிற்
குருடர்க்கு முன்னே குடிகொண் டிருப்பன கோலமல்கு
செருடக் கடிமலர்ச் செல்விதன் செங்கம லக்கரத்தால்
வருடச் சிவப்பன மாற்பே றுடையான் மலரடியே.

Ist Thirumurai - Part - 2

திருச்சிற்றம்பலம்
திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்ததேவாரப் பதிகங்கள் முதல் திருமுறை (இரண்டாம் பகுதி)

பண் - வியாழக்குறிஞ்சி

1.குருந்தவன் குருகவன் கூர்மையவன்
பெருந்தகை பெண்ணவன் ஆணுமவன்
கருந்தட மலர்க்கண்ணி காதல்செய்யும்
மருந்தவன் வளநகர் மாற்பேறே.

2. பாறணி வெண்டலை கையிலேந்தி
வேறணி பலிகொளும் வேட்கையனாய்
நீறணிந் துமையொரு பாகம்வைத்த
மாறிலி வளநகர் மாற்பேறே.

3. கருவுடை யாருல கங்கள்வேவச்
செருவிடை ஏறியுஞ் சென்றுநின்
றுருவுடை யாளுமை யாளுந்தானும்
மருவிய வளநகர் மாற்பேறே.

4.தலையவன் தலையணி மாலைபூண்டு
கொலைநவில் கூற்றினைக் கொன்றுகந்தான்
கலைநவின் றான்கயி லாயமென்னும்
மலையவன் வளநகர் மாற்பேறே.

5.துறையவன் தொழிலவன் தொல்லுயிர்க்கும்
பிறையணி சடைமுடிப் பெண்ணொர்பாகன்
கறையணி மிடற்றண்ணல் காலற்செற்ற
மறையவன் வளநகர் மாற்பேறே.

6.பெண்ணின்நல் லாளையொர் பாகம்வைத்துக்
கண்ணினாற் காமனைக் காய்ந்தவன்றன்
விண்ணவர் தானவர் முனிவரொடு
மண்ணவர் வணங்குநன் மாற்பேறே.

7.தீதிலா மலையெடுத் தவ்வரக்கன்
நீதியால் வேதகீ தங்கள்பாட
ஆதியா னாகிய அண்ணலெங்கள்
மாதிதன் வளநகர் மாற்பேறே.

8.செய்யதண் தாமரைக் கண்ணனொடுங்
¦ காய்யணி நறுமலர் மேலயனும்
ஐயன்நன் சேவடி அதனையுள்க
மையல்செய் வளநகர் மாற்பேறே.

9.குளித்துணா அமணர்குண் டாக்கரென்றுங்
களித்துநன் கழலடி காணலுற்றார்
முளைத்தவெண் மதியினொ டரவஞ்சென்னி
வளைத்தவன் வளநகர் மாற்பேறே.

10.அந்தமில் ஞானசம் பந்தன்நல்ல
செந்திசை பாடல்செய் மாற்பேற்றைச்
சந்தமின் றமிழ்கள்கொண் டேத்தவல்லார்
எந்தைதன் கழலடி எய்துவரே.

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் - மால்வணங்குமீசர், தேவியார் - கருணைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்

Ist Thirumurai - Part - 1

முதல் திருமுறை
திருச்சிற்றம்பலம்
திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்ததேவாரப் பதிகங்கள்
முதல் திருமுறை

பண் - பழந்தக்கராகம்
1.ஊறி யார்தரு நஞ்சினை யுண்டுமை
நீறு சேர்திரு மேனியர்
சேறு சேர்வயல் தென்திரு மாற்பேற்றின்
மாறி லாமணி கண்டரே.
2.தொடையார் மாமலர் கொண்டிரு போதும்மை
அடைவா ராமடி கள்ளென
மடையார் நீர்மல்கு மன்னிய மாற்பே
றுடையீ ரேயுமை யுள்கியே.
3.பையா ரும்மர வங்கொடு வாட்டிய
கையா னென்று வணங்குவர்
மையார் நஞ்சுண்டு மாற்பேற் றிருக்கின்ற
ஐயா நின்னடி யார்களே.
4.சால மாமலர் கொண்டு சரணென்று
மேலை யார்கள் விரும்புவர்
மாலி னார்வழி பாடுசெய் மாற்பேற்று
நீல மார்கண்ட நின்னையே.
5.மாறி லாமணி யேயென்று வானவர்
ஏற வேமிக ஏத்துவர்
கூற னேகுல வுந்திரு மாற்பேற்றின்
நீற னேயென்று நின்னையே.

6.உரையா தாரில்லை யொன்றுநின் தன்மையைப்
பரவா தாரில்லை நாள்களும்
திரையார் பாலியின் தென்கரை மாற்பேற்
றரையா னேயருள் நல்கிடே.

7.அரச ளிக்கும் அரக்கன் அவன்றனை
உரைகெ டுத்தவன் ஒல்கிட
வரமி குத்தவெம் மாற்பேற் றடிகளைப்
பரவி டக்கெடும் பாவமே.

8.இருவர் தேவருந் தேடித் திரிந்தினி
ஒருவ ராலறி வொண்ணிலன்
மருவு நீள்கழல் மாற்பேற் றடிகளைப்
பரவு வார்வினை பாறுமே.

9.தூசு போர்த்துழல் வார்கையில் துற்றுணும்
நீசர் தம்முரை கொள்ளெலுந்
தேசம் மல்கிய தென்திரு மாற்பேற்றின்
ஈச னென்றெடுத் தேத்துமே.

10.மன்னி மாலொடு சோமன் பணிசெயும்
மன்னும் மாற்பேற் றடிகளை
மன்னு காழியுள் ஞானசம் பந்தன்சொல்
பன்ன வேவினை பாறுமே.

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மால்வணங்குமீசர், தேவியார் - கருணைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
S

Monday, November 12, 2007

Thirumalpur


திருச்சிற்றம்பலம்
Thirumalpur – A Holy Shrine

Source: தேவாரம் & Dinamani Dt. 05.11.1999

Thirumalpur a holy town is located in the spiritual belt of Arakkonam – Kancheepuram route. The original name of this town is THIRUMAARPERU (திருமாற்பேறு) as obtained from the bakthi literature (i.e. ) தேவாரம். It is located 5 kms west of Arakkonam – Kancheepuram road and Thirumalpur railway station. This place is bestowed with a temple of Lord Shiva. It is an ancient one, of times long past 7th century A.D. (refer para 4 below). The presiding deity is Lord MANIGANDEESWARAR with ANJANAKSHI AMBAL.

Sthala Puranam:
1.The Lingam(மூலவர்) is formed of sand and not of stone like other Shiva temples. The tradition (ஸ்தல புராணம்) says that Parvathi Devi, being separated from the Lord Shiva for a time, wanted to rejoin the Lord. Hence she forged a lingam out of the vridhdhaksheera (வ்ருத்தக்ஷர) river- sand, worshipped and rejoined the Lord. The Lingam is covered with a Kavacham (கவசம்)during the daily abhisekam. On special occasions a specially prepared oil (புனுகு சட்டம்) is applied on the lingam.

2. A Vishnu deity (செந்தாமரைக் கண்ணன்) is also consecrated, facing Lord Shiva in a worshiping posture. As per the legend, Vishnu who had lost his chakra during a combat with rishi Athisi (அதிசி), worshipped Lord Shiva here and got the Sudharshana Chakra. The other name of the Lord MAL-VANANGEESAR is indicative to this legend. For the same reason this place is also known as HARICHAKRAPURAM.

3. The Holy tree (ஸ்தல வ்ருக்ஷம்) - is VILVAM; Theertham: Chakra Theertham.

4. The place gets special importance in the Saiva tradition due to the visit of great saivaite savants(நாயன்மார்) ThirugananaSampanthar and ThiruNavukkarasar (Appar) both of whom lived-in the 7th Century. They have sung 60 hymns (தேவாரம்) in praise of the presiding deity here.

5. 10 days Bramothsavam is held every year in the Tamil month of Masi (மாசி) – (Feb-March).

Epilogue: The temple is of great significance in saiva – tradition. Therefore devotees should do well to include this sacred place in their pilgrim itenarary and be blessed by the presiding deity over here.

திருச்சிற்றம்பலம்